- Advertisement -
பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே புற்றுநோய் பாதிப்பு காரணமாக, கிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவனர் நடிகை பூனம் பாண்டே. உ.பி.யைச் சேர்ந்த அவர், மாடல் அழகியும ஆவார். மாடuல் அழகியாக இருந்த அவர், கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக வலம் வருவேன் என்று தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார் நடிகை பூனம் பாண்டே. இதைத் தொடர்ந்து பல சர்ச்சை கருத்துகளை பேசியிருக்கிறார், சர்ச்சையான சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.


கடந்த 2013-ம ஆண்டு பாலிவுட் திரையுலகில் உருவான நஷா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து அவர் தனக்கென தனியாக இணையதளம் தொடங்கினார். இதில், அவர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தனது காதலர் ஒருவரை அவர் மக்களுக்கு அறிமுகம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். ஆனால், சில நாட்களிலேயே அவர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறி அவர் மீது புகார் அளித்தார்.



