பிக் பாஸ் பூர்ணிமா ரவி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது.
பூர்ணிமா ரவி, யூட்யூபில் தொடர்ச்சியாக வீடியோ வெளியிடுவதன் மூலம் பிரபலமடைந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேகரித்து வைத்துள்ளார். அதே சமயம் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே செவப்பி எனும் படத்திலும் நடித்திருக்கிறார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் பூர்ணிமா ரவி, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது பல பட வாய்ப்புகள் தேடி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பூர்ணிமா ரவி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படத்தை கோவை ஃபிலிம் ஃபேக்டரி எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. ஹரி மகாதேவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். க்ளிஃபி கிரிஸ் இசை அமைக்க அபி ஆத்விக் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக இருப்பதாக பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.