Homeசெய்திகள்சினிமாதலைவர் 171 படத்தில் இணையும் பிரபல தெலுங்கு நடிகர்!

தலைவர் 171 படத்தில் இணையும் பிரபல தெலுங்கு நடிகர்!

-

- Advertisement -

ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படம் 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. அடுத்தபடியாக ரஜினி தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார். தலைவர் 171 படத்தில் இணையும் பிரபல தெலுங்கு நடிகர்!இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதி படத்தின் டீசரை வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதே சமயம் தலைவர் 171 படம் தொடர்பான அடுத்த அடுத்த அப்டேட்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி தலைவர் 171 படத்தில் நடிகர் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் மைக் மோகன் வில்லனாக நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் மைக் மோகன் படத்தில் தடுக்க இருப்பது உண்மையான தகவல் இல்லை என்பதும் படத்தில் வேறொரு பிரபல தெலுங்கு நடிகர் இணைய இருக்கிறார் என்பதும் இதன் கூடுதல் தகவலாகும். தலைவர் 171 படத்தில் இணையும் பிரபல தெலுங்கு நடிகர்!அதாவது நடிகர் நாகார்ஜுனா தலைவர் 171 படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க உள்ளாராம். இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

நடிகர் நாகார்ஜுனா ஏற்கனவே தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ