spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமிகவும் எதிர்பார்க்கப்படும் போர் தொழில் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்!

மிகவும் எதிர்பார்க்கப்படும் போர் தொழில் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்!

-

- Advertisement -

போர் தொழில் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் போர் தொழில். இப்படத்தினை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். சைக்கோ கிரைம் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த மே 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

we-r-hiring

இந்த படம் வெளியாகி ஒரு மாத காலம் கடந்தும் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு இதன் திரைக்கதையும் வசனங்களுமே மிகப்பெரிய பலம் அளிக்கிறது. இப்படம் ராட்சசன் படத்திற்கு பிறகு முக்கியமான சைக்கோ திரில்லர் படமாக பேசப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் தேவையற்ற வசனங்களோ, பாடல் காட்சிகளோ, சண்டை காட்சிகளோ இடம்பெறவில்லை என்றும் படம் தொடங்கியதிலிருந்து முடிவடையும் வரை படத்தில் இருக்கும் சுவாரசியங்கள் குறையவில்லை என்றும் இந்த படம் குறித்து பல்வேறு விதமான பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்துள்ளன.

மேலும் போர் தொழில் திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது.தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் அமெரிக்காவிலும் கூட வசூல் ரீதியாக இந்த படம் சாதனை படைத்துள்ளது.

தற்போது இந்த படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ