பிரபாஸ் சீதாராமம் பட இயக்குனர் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
பான்- இந்தியா சூப்பர் ஸ்டாரான பிரபாஸ், அடுத்ததாக சீதாராமம் படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடியுடன் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹனுவின் கடைசிப் படமான சீதா ராமம் படத்தை தயாரித்த வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தான் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனராம். பிரபாஸ் ஏற்கனவே வைஜெயந்தி மூவீஸ் தயாரிப்பில் ப்ராஜெக்ட் கே படத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் ஒரு தனித்துவமான கதைக்களத்துடன் ஒரு ரொமான்ஸ் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாஸ் மீண்டும் ஹனு ராகவபுடியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும், கடந்த சில நாட்களாக இதற்காக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் பிரபாஸ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். தற்போதைய கமிட்மென்ட்களை முடித்த பிறகு பிரபாஸ் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் பாலிவுட் இயக்குனர் ஓம் ராட் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.