Homeசெய்திகள்சினிமாபிரபாஸ் நடிப்பில் வெளியான 'கல்கி 2898AD' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘கல்கி 2898AD’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898AD படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.பிரபாஸ் நடிப்பில் வெளியான 'கல்கி 2898AD' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

நடிகர் பிரபாஸ் தற்போது மாருதி இயக்கத்தில் ராஜாசாப் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹாரர் ரொமான்டிக் காமெடி கதை படத்தில் உருவாகி வரும் இந்த படம் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்கு முன்பாக நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898AD எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மகாபாரத கதையை தழுவி சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியிருந்த இந்த படம் கடந்த ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது.பிரபாஸ் நடிப்பில் வெளியான 'கல்கி 2898AD' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அந்த வகையில் இப்படம் கிட்டத்தட்ட 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என படக்குழுவினர் சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

கல்கி 2898AD திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ