கார்த்தி நடிக்கும் மெய்யழகன் படத்தின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் கார்த்தி ஜப்பான் படத்திற்கு பிறகு சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் இவர் 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தின் தனது 27வது திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு மெய்யழகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமி கார்த்தி உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். குடும்ப பொழுது போக்கு படமாக உருவாகியுள்ள இந்த படத்தினை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மகேந்திரன் ஜெயராஜூ இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் சமீபத்தில் இந்த படமானது 2024 செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் கார்த்தி, ஸ்ரீ திவ்யா, ராஜ் கிரண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.