தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் D56 படம் குறித்து புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அதேசமயம் இவர் பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். இது தவிர இவர் இயக்குனர், பாடகர் என பன்முகத் திறமைகளை பெற்றிருக்கிறார். அதாவது நடிகர் தனுஷ் சினிமா மீது உள்ள அதீத காதலினால் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் வருகின்ற ஜூன் மாதம் 20ஆம் தேதி குபேரா திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது. அடுத்தது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 55 ஆவது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ். இவ்வாறு தனுஷின் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் D56 படம் தொடர்பான அறிவிப்பை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அதன்படி இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவர்களது கூட்டணியிலான புதிய படம் எப்படி இருக்கும்? என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படம் தொடர்பான அறிவிப்பு போஸ்டரை பார்க்கும்போது இப்படம் வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் படம் போல் தெரிகிறது.
Producer Ishari Ganesh about #Dhanush‘s Projects ⭐:
“Dhanush, Mariselvaraj & ARRahman are joining together in this film..💥 There’s One More film before Mari Selvaraj Film..💥(Porthozil Vigneshraja film)..”pic.twitter.com/VqPkrhjor0
— Laxmi Kanth (@iammoviebuff007) April 20, 2025
இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பகிர்ந்துள்ளார். அதன்படி D56 படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கப் போகிறார் என அறிவித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் ஏற்கனவே தனுஷின் ராயன் படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் D56 படத்திற்கு முன்னால் வேறொரு தனுஷ் படம் இருக்கிறது என்றும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார் ஐசரி கணேஷ். ஆகையினால் ஐசரி கணேஷ் குறிப்பிட்டுள்ள அந்த படம் போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா – தனுஷ் கூட்டணியிலான படமாக இருக்கக்கூடும் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.