spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉங்களை இயக்குவேன் என்று நினைத்ததே இல்லை....'ராயன்' படத்தின் செல்வராகவன் போஸ்டர் வெளியீடு!

உங்களை இயக்குவேன் என்று நினைத்ததே இல்லை….’ராயன்’ படத்தின் செல்வராகவன் போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

உங்களை இயக்குவேன் என்று நினைத்ததே இல்லை....'ராயன்' படத்தின் செல்வராகவன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!தனுஷ், ப. பாண்டி படத்திற்குப் பிறகு தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். வடசென்னையில் நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து மாஸான கேங்ஸ்டர் படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பட குழுவினர் கவனம் பெற்றனர்.

அதை தொடர்ந்து நடிகர் எஸ்ஜே சூர்யாவின் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் தற்போது இயக்குனரும் தனுஷின் அண்ணனுமான செல்வராகவனின் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதேசமயம், “உங்களை இயக்கவேன் என்று நினைத்ததே இல்லை சார்” என்று தந்து அண்ணன் செல்வராகவனை இயக்கியது குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

we-r-hiring

அதற்கு செல்வராகவன், “வாய்ப்பு அளித்ததற்கு நன்றி இயக்குனர் சார். உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்” என்று பதில் அளித்துள்ளார்.

MUST READ