spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅதெல்லாம் வதந்தி...... 'காஞ்சனா 4' படம் குறித்து ராகவா லாரன்ஸின் பதிவு!

அதெல்லாம் வதந்தி…… ‘காஞ்சனா 4’ படம் குறித்து ராகவா லாரன்ஸின் பதிவு!

-

- Advertisement -

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அதேசமயம் இவர் இயக்குனர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளையும் கொண்டவர். அதெல்லாம் வதந்தி...... 'காஞ்சனா 4' படம் குறித்து ராகவா லாரன்ஸின் பதிவு!ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்ததாக பென்ஸ், ஹண்டர் போன்ற படங்கள் உருவாகின்றன. இதற்கிடையில் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே தான் இயக்கி நடித்த முனி,காஞ்சனா , காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற படங்களின் வரிசையில் அடுத்ததாக காஞ்சனா 4 திரைப்படமும் உருவாக இருக்கிறது. அதெல்லாம் வதந்தி...... 'காஞ்சனா 4' படம் குறித்து ராகவா லாரன்ஸின் பதிவு!இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி ராகவா லாரன்ஸின் ராகவேந்திரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதாவது இந்த படத்தில் சீதாராமம் பட நடிகை மிருணாள் தாகூர் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ தள பக்கத்தில், “காஞ்சனா 4 படத்தில் நடிப்பவர்கள் குறித்து இணையத்தில் பரவி வரும் செய்திகள் எதுவும் உண்மை இல்லை. அது வதந்தி. இது தொடர்பான அறிவிப்பு ராகவேந்திரா ப்ரோடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ