spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் டிரைலர் அப்டேட் லோடிங்!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் டிரைலர் அப்டேட் லோடிங்!

-

- Advertisement -

ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை கோலமாவு கோகிலா டாக்டர் பீச் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை கலாநிதிமாறன் தயாரித்துள்ளார். அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார்.
படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் முதல் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 28ஆம் தேதி படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

we-r-hiring

இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி ஜெயிலரின் ட்ரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது சம்பந்தமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ