Homeசெய்திகள்சினிமாஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா....... தயாரிப்பு நிறுவனம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா……. தயாரிப்பு நிறுவனம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற ஜெயலராக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸுக்காக இப்படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

we-r-hiring

இந்நிலையில் கடந்த ஜூலை 6ஆம் தேதி காவாலா எனும் முதல் பாடல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதைத் தொடர்ந்து வெளியான ஹுக்கும் பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் படத்தின் மற்ற அப்டேட்டுகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அதன்படி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ