Homeசெய்திகள்சினிமாரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் புதிய படம்..... ஷூட்டிங் எப்போது?

ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் புதிய படம்….. ஷூட்டிங் எப்போது?

-

ரஜினிகாந்தின் 171 வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 170 ஆவது படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து அமிதாபச்சன் நடிக்க இருப்பதாகவும் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் ரஜினிகாந்தின் 171 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் லோகேஷ் கனகராஜும் அவரின் துணை கதாசிரியரான ரத்தினகுமாரும் தங்களின் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தெரியவந்தது. அதாவது ரஜினிகாந்தின் 171 வது படத்திற்காக இருவரும் இணைந்து இருந்தார்கள் என்று கூறப்பட்டது.

அதன்படி தற்போது லியோ படப்பிடிப்பை நிறைவு செய்த லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு ரஜினியின் 171 வது படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை தொடங்குவார் என்றும் அதற்காக அவர் நான்கு மாதங்கள் எடுத்துக் கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.  அதனால் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ