Homeசெய்திகள்சினிமாரஜினிகாந்திடம் பாராட்டு பெற்ற 'மார்க் ஆண்டனி' பட இயக்குனர்!

ரஜினிகாந்திடம் பாராட்டு பெற்ற ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குனர்!

-

- Advertisement -

ஆதிக்க ரவிச்சந்திரன் ரஜினிகாந்தின் நேரில் சந்தித்து பாராட்டுகளை பெற்றுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் உருவானது. விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி இருந்த இப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்ட இப்படம் உலக அளவில் 80 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. ஆதிக்க ரவிச்சந்திரனின் முந்தைய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. பல்வேறு தரப்பினர் இடையே இந்த படம் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.

we-r-hiring

இது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று ரஜினிகாந்த் சாரை சந்தித்தேன். அவரிடமிருந்து ஊக்கம் அளிக்கும் வார்த்தைகளையும் பாராட்டுகளையும் பெற்றேன்” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

MUST READ