Homeசெய்திகள்சினிமாஇந்தியன் 2 வீடியோவை வெளியிடும் ஐந்து முக்கிய நட்சத்திரங்கள்

இந்தியன் 2 வீடியோவை வெளியிடும் ஐந்து முக்கிய நட்சத்திரங்கள்

-

- Advertisement -
கடந்த 1996 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் இந்தியன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு 17 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், சமுத்திரகனி, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

லைக்கா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு இந்தியன் 2 வெளியாக இருக்கிறது. 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் 2 ஸ்பெஷல் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்தியன் முதல் பாகத்தில் கமல் நேதாஜி சந்திர போஸ் கெட்டப்பில் இருப்பது போன்று காணப்பட்டார்.

கமலின் பிறந்தநாளை ஒட்டி இன்று இந்தியன் 2 படத்தின் அறிமுக காணொலி வெளியாகிறது. இந்த வீடியோவை பல மொழிகளைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் வெளியிடுகின்றனர். தமிழில் ரஜினிகாந்த், மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் அமீர்கான், கன்னடத்தில் சுதீப், தெலுங்கில் ராஜமௌலி ஆகியோர் இந்த காணொலியை வெளியிடுகின்றனர்.

MUST READ