spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉபி முதல்வர் யோகி காலில் விழுந்த ரஜினி... வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

உபி முதல்வர் யோகி காலில் விழுந்த ரஜினி… வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

-

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது பெரும் பேசு பொருளாகியுள்ளது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கலவரம் நிகழ்த்தி வருகிறது.

we-r-hiring

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் முன்னரே ரஜினி வழக்கமாக செல்லும் இமயமலை பயணத்தை தொடங்கி விட்டார். அங்கு பல்வேறு ஆன்மீக பயணங்களை மேற்கொண்ட அவர் தற்போது உத்தர பிரதேசத்தில் டெண்ட் அடித்துள்ளார்.

சமீபத்தில் அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சருடன் ஜெயிலர் படத்தை பார்த்தார் ரஜினி. தற்போது உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கும்போது அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் புயலைக் கிளப்பியிருக்கிறது. யோகியின் வயது 51 ரஜினிகாந்த் வயது 72.

தன்னைவிட சிறியவர் காலில் எப்படி அவர் விழலாம். பா ரஞ்சித்தின் கபாலி காலா உள்ளிட்ட படங்களில் நடித்த ரஜினிகாந்த் எப்படி இப்படி செய்யலாம், காலா படத்தில் காலில் விழ வேண்டாம் வணக்கம் சொன்னால் போதும் என்று ஒரு காட்சி கூட இருக்கும். அதில் நடித்த ஹீரோ ஒருவர் காலில் விழுந்திருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் ரஜினியை தாக்க ஆரம்பித்துள்ளனர்.

MUST READ