Homeசெய்திகள்சினிமாஅக்கா திருமணத்தில் குத்தாட்டம் போட்ட அதிதி ஷங்கர்... வீடியோ வைரல்...

அக்கா திருமணத்தில் குத்தாட்டம் போட்ட அதிதி ஷங்கர்… வீடியோ வைரல்…

-

அக்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தங்கையும், நடிகையுமான அதிதி ஷங்கர் பாலிவுட் நடிகருடன் இணைந்து நடனமாடியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அதிதி ஷங்கர். இவர் பிரபல இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் ஆவார். கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் திரைப்படத்திலும் அவர் நாயகியாக நடித்திருந்தார். அப்படத்தில் பத்திரிகையாளராக நடித்து புகழ் பெற்றார் அதிதி ஷங்கர்.

நடிப்பு மட்டுமன்றி நடனம், பாடல் என அனைத்து துறைகளிலும் அவர் கலக்கி வருகிறார். தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் மற்றும் பல திரைப்டங்களில் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே, அதிதியின் அக்கா ஐஸ்வர்யாவின் திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த, வரவேற்பு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் தங்கையும், நடிகையுமான அதிதியும், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்  மற்றும் இயக்குர் அட்லீ ஆகியோர் இணைந்து நடனமாடினர். டிரம்ஸ் சிவமணி இசைத்த அப்படி போடு பாடலுக்கு இருவரும் மேடையில் ஆடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ