Homeசெய்திகள்சினிமாகிரைம் திரில்லர் பின்னணியில் விஜய் ஆண்டனியின் 'ரத்தம்'.... ட்ரெய்லர் வெளியீடு!

கிரைம் திரில்லர் பின்னணியில் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’…. ட்ரெய்லர் வெளியீடு!

-

- Advertisement -

ரத்தம் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

பல படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் ஆண்டனி சி எஸ் அமுதன் இயக்கியுள்ள ரத்தம் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அமர்நாத்தின் ஒளிப்பதிவிலும் கண்ணன் நாராயணன் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்த ட்ரெய்லர் க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது இந்த ட்ரெய்லர் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

MUST READ