ரெட்ரோ படத்திலிருந்து புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 44 வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்துள்ளார். இதில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் வருகின்ற மே 1ஆம் தேதி திரைக்கு வர இப்படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ‘கனிமா’ பாடல் இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது. அதைத் தொடர்ந்து ‘THE ONE’ பாடல் இன்று (ஏப்ரல் 12) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
A peak from the #TheOne‘s heat 🔥#Retro 3rd single 🕔 will be served at 5PM today ❗
A @Music_Santhosh Musical
ft. @sidsriram x @shanvdp x #SaNa
✒ @Lyricist_Vivek & Backing vocals by #Mahalakshmi & #Victor #LoveLaughterWar #RetroFromMay1 @Suriya_Offl #Jyotika… pic.twitter.com/94YHJ2deu2— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 12, 2025

அதன்படி தற்போது இப்பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கனிமா பாடலில் சூர்யாவிற்காக சந்தோஷ் நாராயணன் இறங்கி குத்தாட்டம் போட்டிருந்த நிலையில் தற்போது THE ONE பாடல் ப்ரோமோவில் ஹை பிச்சில் அவருடைய குரலை கேட்கும் போதே கூஸ்பம்ஸ் ஆகிறது. எனவே இந்த பாடலும் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.