spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூடு பிடிக்கும் சிங்கப்பூர் சலூன் புரமோசன்ஸ்

சூடு பிடிக்கும் சிங்கப்பூர் சலூன் புரமோசன்ஸ்

-

- Advertisement -
ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தின் விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆர்.ஜே.பாலாஜி என்ற பெயருக்கும், அவரது குரலுக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆர்ஜே பாலாஜி. ரேடியோவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஹீரோ வேடம் கிடைக்காவிட்டாலும், முக்கிய கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். அதே சமயம் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றினார். அவரது கிரிக்கெட் கமெண்ட்ரிக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்

we-r-hiring
இதையடுத்து, எல்ஜிகே படத்தின் மூலம் அவர் நடிகராக அறிமுகமாகினார். இப்படத்தை ஆர்ஜே பாலாஜி மற்றும் சரவணன் சேர்ந்து இயக்கினர். இதைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கி நடித்தார். இதையடுத்து, வீட்ல விஷேசன், ரன் பேபி ரன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தற்போது ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இதில் சத்யராஜ், மீனாட்சி சௌத்ரி, கிஷன் தாஸ் , ஜான் விஜய், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் விளம்பரப் பணிகள் படு சூடாக நடைபெற்று வருகின்றன. மாறி மாறி புரமோசன் பணிகளில் ஆர்.ஜே பாலாஜி ஈடுபட்டுள்ளார்.

MUST READ