Homeசெய்திகள்சினிமாசமுத்திரக்கனி, பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் கூட்டணியின் ப்ரோ...... அட்டகாசமான ட்ரெய்லர் வெளியானது!

சமுத்திரக்கனி, பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் கூட்டணியின் ப்ரோ…… அட்டகாசமான ட்ரெய்லர் வெளியானது!

-

ப்ரோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சமுத்திரகனி மற்றும் தம்பி ராமையா கூட்டணியில் கடந்த 2021 ஆம் ஆண்டு வினோதய சித்தம் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சமுத்திரக்கனி தானே இயக்கி நடித்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இதைத்தொடர்ந்து இந்த படத்தை சமுத்திரக்கனி தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார். ப்ரோ என்று தலைபிடப்பட்டுள்ள இந்த படத்தில் பவன் கல்யாண் மற்றும் சாய் தரம் தேஜ் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் தமன் இசை அமைத்துள்ளார். த்ரிவிக்ரம் இதற்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லர் மூலம் தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தரம் தேஜ் நடித்துள்ளார் என்றும் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களுடன் ரோகினி, பிரம்மானந்தம், பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த ட்ரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் இந்த படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ