Homeசெய்திகள்சினிமாசமுத்திரக்கனி நடிக்கும் ராமம் ராகவம்... பின்னணி வேலைகள் தீவிரம்..

சமுத்திரக்கனி நடிக்கும் ராமம் ராகவம்… பின்னணி வேலைகள் தீவிரம்..

-

- Advertisement -
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. தொடக்கத்தில் இயக்குநராக வலம் வந்த சமுத்திரக்கனி, தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் ஹீராவாகவும் பல படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு மொழியில் பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் உள்பட தெலுங்கின் உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் சமுத்திரக்கனி வில்லன் வேடத்தில் நடிக்கிறார். தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ரத்னவேல் படத்தில் நடித்து வருகிறார்.

 

இதுதவிர தமிழில் பல படங்களில் கமிட்டாகி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. அவரது நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ராமம் ராகவம். பிருத்வி இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. அப்பா – மகன் பாசத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து படத்தின் முன்னோட்டம் அண்மையில் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

MUST READ