spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிணமாக நடிக்கும் சந்தானம்.... எந்த படத்தில் தெரியுமா?

பிணமாக நடிக்கும் சந்தானம்…. எந்த படத்தில் தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கினார். அதன்படி பொல்லாதவன், பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி என பல படங்களில் விஜய், தனுஷ், ஜெயம் ரவி, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். பிணமாக நடிக்கும் சந்தானம்.... எந்த படத்தில் தெரியுமா?இவர் தனது நகைச்சுவை திறமையால் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார். அதேசமயம் இவர் கிட்டதட்ட 10 வருடங்களுக்கு முன்பிலிருந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களை ஹீரோவாகவே நடித்து வருகிறார் சந்தானம். கடைசியாக இவருடைய நடிப்பில் இங்க நான் தான் கிங்கு திரைப்படம் வெளியான நிலையில் அடுத்ததாக டிடி ரிட்டன்ஸ் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் சுந்தர் சி இயக்கத்திலும் விஷால் நடிப்பிலும் உருவாகியுள்ள மதகஜராஜா எனும் திரைப்படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த 11 வருடங்களாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.பிணமாக நடிக்கும் சந்தானம்.... எந்த படத்தில் தெரியுமா?மேலும் பல வருடங்களுக்கு பின்னர் 2024 செப்டம்பர் மாதத்தில் இந்த படத்தை வெளியிட படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜெமினி ஃபிலிம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் மதகஜராஜா படத்தில் பத்து நிமிடங்கள் வரை நடிகர் சந்தானம் பிணமாக நடித்துள்ளாராம் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ