சந்தானம் நடிப்பில் உருவாகும் இங்க நான் தான் கிங்கு படத்தின் மாயோனே எனும் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக திரைத்துறையில் நுழைந்து பெயர் பெற்ற நடிகர் சந்தானம் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக படித்து வருகிறார். இவர்,
வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்குப் பிறகு தற்போது இந்தியா பாகிஸ்தான் பட இயக்குனர் என் ஆனந்த இயக்கத்தில் இங்க நான் தான் கிங்கு எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து ப்ரியாலயா, தம்பி ராமையா உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மாயோனே எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை ஷான் ரோல்டன், ஜோனிடா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர்.
முத்தமிழ் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பட குழுவினர் இந்தப் படத்தை கோடையில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்