Homeசெய்திகள்சினிமாசரத்குமார், அமிதாஷ் கூட்டணியின் பரம்பொருள்.... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சரத்குமார், அமிதாஷ் கூட்டணியின் பரம்பொருள்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

சரத்குமார் மற்றும் அமிதாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பரம்பொருள். கஷ்மிரா பர்தேசி இவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த படத்தை அரவிந்த் ராஜ் எழுதி, இயக்கியுள்ளார். எஸ் பாண்டி குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். எஸ் பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்

கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள படத்தின் டீசர் மற்றும் அடியாத்தி எனும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதற்கிடையில் படத்தின் முதல் பாடலும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இப்படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ