Homeசெய்திகள்சினிமாஆர்யா, கௌதம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தில் இணைந்த மற்றொரு நடிகர்!

ஆர்யா, கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் இணைந்த மற்றொரு நடிகர்!

-

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து மிஸ்டர் எக்ஸ் என்னும் திரைப்படத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான FIR படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்குகிறார். பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கடேஷ் இணைந்து தயாரிக்கின்றனர். படத்திற்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் ஹை பட்ஜெட்டில் ஒரு பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் தொடங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் முக்கிய அப்டேட்டாக நடிகர் சரத்குமார் இந்த படத்தில் இணைந்துள்ளதாக பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே சரத்குமார் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான போர் தொழில் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது.
இந்நிலையில் மற்றுமொரு திரில்லர் படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ