Homeசெய்திகள்சினிமா'மைனா' நடிகருடன் கூட்டணி அமைக்கும் சரத்குமார்!

‘மைனா’ நடிகருடன் கூட்டணி அமைக்கும் சரத்குமார்!

-

- Advertisement -

நடிகர் சரத்குமார் விதார்த் உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் சரத்குமார் தற்போது பல இளம் நடிகர்களுடனும் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘வாரிசு’ படத்திலும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ருத்ரன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் அசோக் செல்வன் உடன் ‘போர்த் தொழில்’ என்னும் படத்தில் இணைந்துள்ளார் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது நடிகர் விதார்த்துடன் இணைந்து நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

விதார்த் மைனா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார்.

தற்போது விதார்த் நடிப்பில் திருமலை பாலுச்சாமி இயக்கும் திரைப்படம் ‘சமரன்’. இந்தப் படத்தை எம் 360 டிகிரி ஸ்டுடியோ தயாரிக்கிறது. குமார் ஸ்ரீதர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். வேத் சங்கர் சுகவனம் இசையமைப்பில் இப்படம் உருவாகிறது.

படத்தில் மலையாள நடிகர்கள் சித்திக் மற்றும் ஆர். நந்தா இருவரும் நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் கும்கி அஸ்வின், சிங்கம் புலி, ஜார்ஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆர்.நந்தா இப்படத்தில் வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இது ராணுவ அதிகாரி மற்றும் ஐஏஎஸ் அதிகாரி இவர்களை சுற்றி நடக்கும் சஸ்பென்ஸ் கதையாகும்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பானது சென்னையில் வளசரவாக்கம் காட்டுப்பாக்கம், மணலி, மீனம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ