Homeசெய்திகள்சினிமாரஜினியின் நண்பனாக நடிக்கும் சத்யராஜ்..... 'கூலி' பட அப்டேட்!

ரஜினியின் நண்பனாக நடிக்கும் சத்யராஜ்….. ‘கூலி’ பட அப்டேட்!

-

நடிகர் ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். டிஜே ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் 2024 அக்டோபர் மாதத்தில் படமானது திரையிடப்பட உள்ளது. ரஜினியின் நண்பனாக நடிக்கும் சத்யராஜ்..... 'கூலி' பட அப்டேட்!அதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்து சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. அதைத் தொடர்ந்து படம் சம்பந்தமான அப்டேட்டுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. மேலும் சாண்டி மாஸ்டர், ஷோபனா, நாகார்ஜுனா போன்றோரின் பெயர்களும் அடிபட்டு வருகின்றன.ரஜினியின் நண்பனாக நடிக்கும் சத்யராஜ்..... 'கூலி' பட அப்டேட்! அடுத்ததாக நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. தற்போது கிடைத்த கூடுதல் தகவல் என்னவென்றால் நடிகர் சத்யராஜ், தான் கூலி திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அதேசமயம் இந்த படத்தில் சத்யராஜ், ரஜினிக்கு நண்பனாக நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ரஜினியுடன் இணைந்து சத்யராஜ் பல படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது 38 வருடங்களுக்குப் பிறகு ரஜினி, சத்யராஜ் கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ