- Advertisement -
பாலிவுட்டின் கிங்கானாகவும், இந்தி திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகவும் வலம் வரும் முன்னணி நட்சத்திரம் ஷாருக்கான். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மூன்று திரைப்படங்களும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வரலாற்று சாதனை புரிந்தன. ஆண்டின் தொடக்கத்தில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் வெளியானது. இதில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் சுமார் ஆயிரம் கோடி வசூலித்தது.

இதைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த ஜவான் படம் வெளியானது. படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. தொடர்ந்து ஷாருக்கான், டாப்ஸி ஆகியோர் நடித்த டன்கி திரைப்படம் ஆண்டு இறுதியில் வெளியானது. இந்நிலையில், ஷாருக்கான் அடுத்ததாக கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார் . சுஜோய் கோஷ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




