spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஷியாம் நடிக்கும் 'அஸ்திரம்'.... ரிலீஸ் குறித்த தகவல்!

ஷியாம் நடிக்கும் ‘அஸ்திரம்’…. ரிலீஸ் குறித்த தகவல்!

-

- Advertisement -

ஷியாம் நடிக்கும் அஸ்திரம் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ஷியாம் தமிழ் சினிமாவில் கடந்த 2001 இல் வெளியான 12பி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். ஷியாம் நடிக்கும் 'அஸ்திரம்'.... ரிலீஸ் குறித்த தகவல்!அதைத்தொடர்ந்து சாக்லேட் பாயாக வலம் வந்த இவருக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து உள்ளம் கேட்குமே, லேசா லேசா என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார் ஷியாம். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஜெயம் ரவியின் தில்லாலங்கடி, விஜயின் வாரிசு போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றுள்ளார். அடுத்தது இவர், அஸ்திரம் எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். மிஸ்டரி திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தினை அரவிந்த் ராஜகோபால் இயக்கியிருக்கிறார். ஷியாம் நடிக்கும் 'அஸ்திரம்'.... ரிலீஸ் குறித்த தகவல்!பெஸ்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து அதைத் தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த படமானது வருகின்ற டிசம்பர் மாதம் திரைக்கு வர இருப்பதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ