spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கேங்கர்ஸ்' படம் குறித்து சிம்பு வெளியிட்ட பதிவு!

‘கேங்கர்ஸ்’ படம் குறித்து சிம்பு வெளியிட்ட பதிவு!

-

- Advertisement -

நடிகர் சிம்பு, கேங்கர்ஸ் படம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.'கேங்கர்ஸ்' படம் குறித்து சிம்பு வெளியிட்ட பதிவு!

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, கேத்தரின் தெரசா, வாணி போஜன், மைம் கோபி ஆகியோரின் நடிப்பில் நேற்று (ஏப்ரல் 24) உலகம் முழுவதும் வெளியான படம்தான் கேங்கர்ஸ். இந்த படத்தை அவ்னி சினிமாக்ஸ் நிறுவனம் தயாரிக்க சி. சத்யா இதற்கு இசையமைத்திருந்தார். காமெடி கலந்த கதையில் உருவாகியிருந்த இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வந்தது. ஏனென்றால் சுந்தர்.சி – வடிவேலு காம்போ கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து இருக்கிறது. இது தவிர வடிவேலு மீண்டும் காமெடியாக பல கெட்டப்புகளில் நடித்திருந்தார். எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக கேங்கர்ஸ் படத்தில் பழைய வடிவேலுவை பார்க்க முடிந்தது. அதன்படி நேற்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

we-r-hiring

இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் சிம்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கேங்கர்ஸ் படத்தைப் பார்த்தேன். ஒரே சிரிப்பு ரகளை தான். வடிவேலு சார் தன்னுடைய மாயாஜாலத்தால் மொத்த படத்தையும் தன்வசம் ஆக்கிவிட்டார். சுந்தர்.சி அண்ணா மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ