நடிகர் சிவகார்த்திகேயன் கேரள முதல்வர் பினராயி விஜயனை புகழ்ந்து பேசி உள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு அமரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இவ்வாறு பராசக்தி, மதராஸி போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் விநாயக் சந்திரசேகரன், வெங்கட் பிரபு, சிபி சக்கரவர்த்தி ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். இவ்வாறு பிஸியான நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், கண்ணூர் பினராயில் நடைபெற்ற பினராயிபெருமா கலை மற்றும் கலாச்சார விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசும்போது, “பினராயி பெருமா நிகழ்வுக்கு நான் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. நான் இத்தனை நாட்களாக முதல்வரின் பெயர்தான் பினராயி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது தான் அது ஒரு ஊரின் பெயர் என்று தெரிந்தது. ஒரு ஊரின் பெயரை தாங்கி இன்று ஒரு ஜகானாக மாறி உள்ளார் முதல்வர். அது மட்டும் இல்லாமல் ‘பிறந்த ஊருக்கு பெருமை சேரு.. வளர்ந்து நாட்டிற்கு புகழை சேரு‘ என்று ரஜினி சாரின் முரட்டுக்காளை படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். அந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பதை விஜயன் சாரை பார்த்து தெரிந்து கொள்ளலாம்” என்றார்.
View this post on Instagram
மேலும் இது தொடர்பாக சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ” கண்ணூர் பினராயில் நடைபெற்ற பினராயிபெருமா கலை மற்றும் கலாச்சார விழாவில்கலந்து கொண்டது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், சுற்றுலாத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ், சபாநாயகர் சம்சீர், ஆசிப் அலி மற்றும் பத்திரிக்கையாளர் ‘தி இந்து’ ராம் ஆகியோருடன் மேடையை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. கேரள மக்களின் அன்பும், ஆதரவும் என்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்தது. இந்த மறக்க முடியாத நினைவுகளுக்கு நன்றி” என்று குறிப்பிட்டு அந்த நிகழ்வின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.