வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் பா. ரஞ்சித். இவர் தற்போது வேட்டுவம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க ஆர்யா வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இவர்களுடன் இணைந்து கலையரசன், சோபிதா துலிபாலா, குரு சோமசுந்தரம், சபீர் கல்லாரக்கல், ஜான் விஜய், மைம் கோபி மற்றும் பலர் நடிக்கின்றனர். நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ரூபேஷ் சாஜி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாக கும்பகோணம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாகவும், இந்த மாத இறுதிக்குள் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் எனவும் புதிய தகவல் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.