spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'புறநானூறு' பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சிவகார்த்திகேயன்!

‘புறநானூறு’ பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன், SK23 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன்.'புறநானூறு' பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சிவகார்த்திகேயன்! இந்நிலையில் தான் சமீபகாலமாக நடிகர் சிவகார்த்திகேயன் புறநானூறு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

அதாவது ஏற்கனவே சுதா கொங்கரா, சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த திரைப்படம் தான் புறநானூறு. இந்த படமானது கடந்த 1950 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கிறது. சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியின் 'புறநானூறு' டிராப்பா?..... திடீர் அறிக்கை எதற்காக?இது தொடர்பான அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகி படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் நடிகர் சூர்யா, ஒரு சில அரசியல் காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து சுதா கொங்கரா, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரை அணுகி புறநானூறு படத்தில் நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினாராம். கால்ஷீட் பிரச்சினை காரணமாக தனுஷும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் புறநானூறு படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படமானது சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகும் என்றும் இந்த படத்திற்கான ஒப்பந்தத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கையெழுத்து விட்டதாகவும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. 'புறநானூறு' பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சிவகார்த்திகேயன்!ஆகையினால் விரைவில் புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் படத்தின் படப்பிடிப்பும் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ