சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று அமரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5அம் தேதி மதராஸி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், பிஜு மேனன், வித்யூத் ஜம்வால், விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். சுதீப் எலாமன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படமானது ஆக்சன் கலந்த கதைக்களத்தில் ஸ்பை திரில்லர் படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. தூத்துக்குடி, சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டது.
#Madharasi – Srilanka Schedule WARP#SivaKarthikeyan Big Spy Action Film 🎥
pic.twitter.com/Erhzf3W6cl— Movie Tamil (@MovieTamil4) May 30, 2025
இந்நிலையில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் டீசர் போன்ற மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.