Homeசெய்திகள்சினிமாஅக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போகும் சிவகார்த்திகேயனின் அமரன்?

அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போகும் சிவகார்த்திகேயனின் அமரன்?

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர். இவருடைய படங்கள் பெரும்பாலும் குடும்பங்கள் கொண்டாடும் விதமாக அமையும். அந்த வகையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போகும் சிவகார்த்திகேயனின் அமரன்?கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் சிவகார்த்திகேயன் தனது 21வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷின் இசையிலும் அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போகும் சிவகார்த்திகேயனின் அமரன்?ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனால் ரசிகர்கள் பலரும் ரிலீஸ் குறித்த அப்டேட்டை தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதன்படி இந்த படமானது ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது.அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போகும் சிவகார்த்திகேயனின் அமரன்? பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகலாம் என்றும் செய்திகள் பரவி வருகிறது. தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் செப்டம்பர் 27 இல் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றால் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் படத்தின் ரிலீஸ் எப்போது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ