Homeசெய்திகள்சினிமாமாஸான லுக்கில் எஸ்.ஜே. சூர்யா...... 'வீர தீர சூரன்' படக்குழு வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மாஸான லுக்கில் எஸ்.ஜே. சூர்யா…… ‘வீர தீர சூரன்’ படக்குழு வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

-

- Advertisement -

எஸ்.ஜே. சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வீர தீர சூரன் படக்குழு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.மாஸான லுக்கில் எஸ்.ஜே. சூர்யா...... 'வீர தீர சூரன்' படக்குழு வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வீர தீர சூரன். விக்ரமின் 62 வது படமான இந்த படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்தப் படத்தை சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அத்துடன் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டது. அதன்படி தென்காசி, மதுரை போன்ற பல பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எஸ் ஜே சூர்யா வில் 56வது பிறந்தநாளான இன்று (ஜூலை 20) அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வீர தீர சூரன் பட குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. மாஸான லுக்கில் எஸ்.ஜே. சூர்யா...... 'வீர தீர சூரன்' படக்குழு வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!அந்த போஸ்டரில் எஸ் ஜே சூர்யா, காக்கிச்சட்டையில் போலீஸ் கெட்டப்பில் மாஸான லுக்கில் காணப்படுகிறார். மேலும் அந்த போஸ்டரின் மூலம் நடிகர் எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் அருணகிரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ