spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஜெயிலர் 2' படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி.... வைரலாகும் புகைப்படம்!

‘ஜெயிலர் 2’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி…. வைரலாகும் புகைப்படம்!

-

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் என தகவல் வெளியாகி வருகிறது.'ஜெயிலர் 2' படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி.... வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் நெல்சன். இவர் ரஜினிக்காக தரமான கதையை தயார் செய்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெயிலர் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தையும் இயக்கி வருகிறார் நெல்சன். அதாவது ரஜினி பொதுவாக தன்னுடைய படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதில்லை. அந்த வகையில் சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடிக்க மறுத்துவிட்டார் ரஜினி. ஆனால் ஜெயிலர் படத்திற்கு கிடைத்த இமாலய வெற்றிக்கு பிறகு ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன்படி ஜெயிலர் 2 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 'ஜெயிலர் 2' படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி.... வைரலாகும் புகைப்படம்!ஏற்கனவே அட்டப்பாடியில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்தது 20 நாட்கள் கோழிக்கோடில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் ஆகியோர் இதில் நடித்து வருகின்றனர். மேலும் கேமியோ ரோலில் மிரட்டி இருந்த மோகன்லால் – சிவராஜ்குமார் ஆகிய இருவரும் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளனர் என சொல்லப்படுகிறது. இது தவிர நந்தமுரி பாலகிருஷ்ணாவும் நடிக்க உள்ளாராம்.'ஜெயிலர் 2' படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி.... வைரலாகும் புகைப்படம்! இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜெயிலர் 2 படத்தில் எஸ்.ஜே. சூர்யா தான் வில்லனாக நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகி வந்தது. அதன்படி தற்போது இயக்குனர் நெல்சன், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தின் செம வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் எஸ்.ஜே. சூர்யா, ஜெயிலர் 2 படத்தில் நடிப்பது உறுதி என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் இனிவரும் நாட்களில் படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ