Homeசெய்திகள்சினிமாமலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் எஸ்.ஜே. சூர்யா..... யாருடைய படத்தில் தெரியுமா?

மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் எஸ்.ஜே. சூர்யா….. யாருடைய படத்தில் தெரியுமா?

-

பிரபல நடிகர் எஸ்.ஜே சூர்யா ஆரம்பத்தில் ஒரு இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். அதன் பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் உடைய இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து பெயர் பெற்றார். மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் எஸ்.ஜே. சூர்யா..... யாருடைய படத்தில் தெரியுமா?அது மட்டும் இல்லாமல் ஸ்பைடர், மெர்சல், மாநாடு போன்ற படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். கடந்த ஆண்டில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக பட்டைய கிளப்பியிருந்தார். அதைத்தொடர்ந்து வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் இவர் இந்தியன் 2 படத்திலும் கேம் சேஞ்சர் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் சியான் 62, எல் ஐ சி போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து பிசியாக நடித்து வரும் எஸ்.ஜே சூர்யா தனது அசாத்தியமான நடிப்பினால் நடிப்பு அரக்கன் என்ற பெயரை பெற்றுள்ளார். இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வரும் நடிப்பு அரக்கன் பகத் பாஸில் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதாவது முதல் முறையாக மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் எஸ்.ஜே. சூர்யா..... யாருடைய படத்தில் தெரியுமா?அதன்படி எஸ் ஜே சூர்யா, பகத் பாசில் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தினை ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் மூலம் பிரபலமான விபின் தாஸ் இயக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இரண்டு நடிப்பு அரக்கன்களின் கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் அதிகமாகியுள்ளது. எனவே இந்த படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ