spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'SK 25' டெஸ்ட் ஷூட் ரத்து.... சுதா கொங்கராவிடம் கோபப்பட்டு கிளம்பிய சிவகார்த்திகேயன்!

‘SK 25’ டெஸ்ட் ஷூட் ரத்து…. சுதா கொங்கராவிடம் கோபப்பட்டு கிளம்பிய சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே சமயம் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.'SK 25' டெஸ்ட் ஷூட் ரத்து.... சுதா கொங்கராவிடம் கோபப்பட்டு கிளம்பிய சிவகார்த்திகேயன்! இதைத்தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி, சுதா கொங்கரா ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார். அதன்படி SK 24, SK 25 ஆகிய இரண்டு படங்களிலும் சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள SK 25 படத்திற்கான டெஸ்ட் ஷூட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இயக்குனர் சுதா கொங்கரா, சிவகார்த்திகேயனிடம் அவரது தாடியை ட்ரிம் பண்ண வேண்டும் என கூறினாராம். அதற்கு சிவகார்த்திகேயன், “அப்படியே இருங்கள் உங்கள் லுக்கை மாற்ற வேண்டாம் என்று நீங்கள் சொன்னதால்தான் நான் வந்தேன்” என்று கூறியுள்ளார். மேலும் சுதா கொங்கரா, தாடியுடன் நீங்கள் இருப்பது பருத்திவீரன் கார்த்தி போல் இருக்கிறது என்று சிவகார்த்திகேயனை பார்த்து சொன்னாராம். உடனடியாக சிவகார்த்திகேயன் எதுவுமே பேசாமல் அந்த இடத்தை விட்டு கிளம்பி சென்றாராம்.'SK 25' டெஸ்ட் ஷூட் ரத்து.... சுதா கொங்கராவிடம் கோபப்பட்டு கிளம்பிய சிவகார்த்திகேயன்! அதன் பிறகு சுதா கொங்கரா, சிவகார்த்திகேயனை செல்போனில் தொடர்பு கொண்ட போதும் சிவகார்த்திகேயன் சுதா கொங்கராவின் அழைப்பை ஏற்கவில்லை என்று சுதா கொங்கரா அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும் அவர் பதில் அளிக்கவில்லை என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சூர்யாவிற்கும் சுதா கொங்கராவிற்கும் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக தான் சூர்யாவிற்கு பதிலாக சிவகார்த்திகேயனை நடிக்க திட்டமிட்டார் சுதா கொங்கரா. ஆனால் தற்போது சிவகார்த்திகேயனும் சுதா கொங்கராவிற்கு பதில் அளிக்காமல் இருப்பதனால் அடுத்தது SK 25 படம் தொடங்கப்படுமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

MUST READ