Homeசெய்திகள்சினிமாஜிவி பிரகாஷ் - ஐஸ்வர்யா ராஜேஸ் கூட்டணியில் டியர்... புதிய பாடல் ரிலீஸ்...

ஜிவி பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஸ் கூட்டணியில் டியர்… புதிய பாடல் ரிலீஸ்…

-

ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் டியர் படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி மற்றும் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ள ஜி.வி. தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். ஆண்டுக்கு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் மட்டும் குறைந்தபட்சம் 3 திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ரிபெல், கள்வன், உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளன. அதே சமயம், ஜிவி நடித்துள்ள மற்றொரு திரைப்படம் தான் டியர்.

இந்த படத்தை செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இதில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ரோகிணி, தலைவாசல் விஜய், பிளாக் ஷீப் நந்தினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை அபிஷேக் ராம் ஷெட்டி, வருண் திரிபுரனேனி, பிரித்திவிராஜ் உள்ளிட்டோர் இணைந்து நட்மக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றனர். ஜிவி பிரகாஷே இப்படத்தில் இசை அமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்திலிருந்து புதிய பாடல் வௌியாகி உள்ளது. நாளை மறுநாள் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ