Homeசெய்திகள்சினிமாபிரம்மயுகம் படம் மிரட்டலாக இருந்தது.... நடிகை ஷோபிதா துலிபாலா புகழாரம்...

பிரம்மயுகம் படம் மிரட்டலாக இருந்தது…. நடிகை ஷோபிதா துலிபாலா புகழாரம்…

-

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் மம்மூட்டி, பல வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் தி கோர். இத்திரைப்படத்தில் ஓரின சேர்க்கையாளராக அவர் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, மம்மூட்டி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் பிரம்மயுகம். இப்படத்தில் முதியவர் வேடத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்துள்ளார்.

பூதகாலம் திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்ற ராகுல் பிரம்மயுகம் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து, அர்ஜூன் அசோகன், சித்தார்த், பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது.

இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியானது. இந்நிலையில், இத்திரைப்படத்தை கண்டு ரசித்த பிரபல நடிகை சோபிதா துலிபாலா, பிரம்மயுகம் படத்தை கண்டு மிரட்டு போனேன் என்று படத்தை பாராட்டியிருக்கிறார்.

MUST READ