Homeசெய்திகள்சினிமாவிரைவில் 'சைரன்' படத்தின் முதல் பாடல்..... பாடுனது யார் தெரியுமா?

விரைவில் ‘சைரன்’ படத்தின் முதல் பாடல்….. பாடுனது யார் தெரியுமா?

-

- Advertisement -

ஜெயம் ரவி நடிப்பில் அந்தோணி பாக்யராஜ் எழுதி இயக்கியுள்ள படம் தான் சைரன். இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மேலும் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இது குறித்த அறிவிப்பை நேற்று பட குழுவினர் வெளியிட்டிருந்தனர்.விரைவில் 'சைரன்' படத்தின் முதல் பாடல்..... பாடுனது யார் தெரியுமா?

எனவே படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் சைரன் படத்தின் முதல் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் எனவும், பாடல் வரிகளை தாமரை எழுதியுள்ளார் எனவும் தகவல் கிடைத்துள்ளது. அதே சமயம் முதல் பாடல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சித் ஸ்ரீராம் குரலில் வெளியான பாடல்கள் பெரும்பாலானவை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடம் பெற்றிருக்கும். எனவே சைரன் படத்தின் இந்த பாடலும் ரசிகர்களை கவரும் என்று நம்பப்படுகிறது.
விரைவில் 'சைரன்' படத்தின் முதல் பாடல்..... பாடுனது யார் தெரியுமா?

கடந்த ஆண்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதன் பிறகு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சைரன் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ