spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?..... 'அயலான்' வசூல் அப்டேட்!

தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?….. ‘அயலான்’ வசூல் அப்டேட்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?..... 'அயலான்' வசூல் அப்டேட்!நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு அயலான் திரைப்படம் வெளியானது. இன்று நேற்று நாளை படத்தின் மூலம் கவனம் பெற்ற ஆர் ரவிக்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். மேலும் கருணாகரன், யோகி பாபு, பால சரவணன், இஷா கோபிகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் ஃபேண்டஸி படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் முதல் நான்கு நாட்களிலேயே உலக அளவில் 50 கோடி வசூலை கடந்ததாக பட குழுவினர் அறிவித்திருந்தனர்.

சிவகார்த்திகேயனின் மற்ற படங்களைப் போல அயலான் படமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும் படத்தில் லாஜிக் மிஸ் ஆவதாக பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் கேரளாவில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?..... 'அயலான்' வசூல் அப்டேட்!

we-r-hiring

இந்நிலையில் அயலான் படம், தமிழ்நாட்டில் மட்டுமே 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அயலான் படம் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி தெலுங்கு மாநிலங்களில் வெளியாக இருக்கிறது. அங்கும் இப்படம் நல்ல வசூலை பெற்றுத் தருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ