spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதேவரா படப்பிடிப்பில் சைஃப் அலிகானுக்கு ஏற்பட்ட காயம்...... மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!

தேவரா படப்பிடிப்பில் சைஃப் அலிகானுக்கு ஏற்பட்ட காயம்…… மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!

-

- Advertisement -

தேவரா படப்பிடிப்பில் சைஃப் அலிகானுக்கு ஏற்பட்ட காயம்...... மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சைஃப் அலிகான். இவர் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திரை துறையில் வலம் வருகிறார். கடைசியாக இவர், பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுரூஷ் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ராவணனாக நடித்திருந்தார்.

தற்போது ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து தேவரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் வில்லனாக நடித்து வருகிறார். கொரட்டலா சிவா இயக்கி வரும் இப்படம் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. சமீபத்தில் படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.தேவரா படப்பிடிப்பில் சைஃப் அலிகானுக்கு ஏற்பட்ட காயம்...... மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!

we-r-hiring

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது சைஃப் அலிகானுக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மும்பை கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அது மட்டும் இல்லாமல் சைஃப் அலிகானுக்கு கையின் மேல் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அவர் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

MUST READ