spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூரி நடித்துள்ள கொட்டுக்காளி... 200 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டம்...

சூரி நடித்துள்ள கொட்டுக்காளி… 200 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டம்…

-

- Advertisement -
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி பல சிறந்த தமிழ் படங்களை தயாரித்து வருகிறார். கனா படத்தின் மூலமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இதுவரை 5 படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி.

கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, படங்களின் வரிசையில், ‘கூழாங்கள்’ படத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சென்று சர்வதேச விருதுகளை வாங்கிய பி.எஸ் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்குகிறார். விடுதலை படத்திற்கு பிறகாக சூரி இந்த படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள பிரபலம் அன்னா பென் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து, 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டது.

இந்நிலையில் பல சர்வதேச விருதுகளை வென்ற சூரி நடித்துள்ள கொட்டுக்காளி படத்தை 200 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் செய்ய, படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் திட்டமிட்டு வருகிறாராம். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் குரங்கு பெடல். இத்திரைப்படம் கடந்த 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

MUST READ