spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷின் இட்லி கடை படத்துடன் மோதும் 'சூர்யா 44'!

தனுஷின் இட்லி கடை படத்துடன் மோதும் ‘சூர்யா 44’!

-

- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வரும் நிலையில் ‘சூர்யா 44‘ திரைப்படத்தையும் நிறைவு செய்துள்ளார் சூர்யா. தனுஷின் இட்லி கடை படத்துடன் மோதும் 'சூர்யா 44'!இந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருக்கிறார். மேலும் சூர்யாவும் கார்த்திக் சுப்புராஜும் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கின்றனர். சூர்யா 44 படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே , ஜெயராம், கருணாகரன் ஆகிய பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படமானது ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் சூர்யா 44 திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27 அல்லது 28ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. தனுஷின் இட்லி கடை படத்துடன் மோதும் 'சூர்யா 44'!ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி சூர்யா 44 படமானது 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அத்துடன் பிரபாஸின் தி ராஜா சாப், யாஷின் டாக்ஸிக் போன்ற படங்களும் ஏப்ரல் 10 அன்று தான் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ