சூர்யா 44 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. மிகப்பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அதே நாளில் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் திரைக்கு வர இருப்பதால் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 44 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தினை சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு அந்தமான், ஊட்டி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து கேரளா, சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சூர்யா 44 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படமானது 2025 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளன. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.