spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமாஸ் ப்ளஸ் கிளாஸ்.... 'சூர்யா 44' படத்தின் வேற லெவல் டைட்டில் டீசர் வெளியீடு!

மாஸ் ப்ளஸ் கிளாஸ்…. ‘சூர்யா 44’ படத்தின் வேற லெவல் டைட்டில் டீசர் வெளியீடு!

-

- Advertisement -

சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.மாஸ் ப்ளஸ் கிளாஸ்.... 'சூர்யா 44' படத்தின் வேற லெவல் டைட்டில் டீசர் வெளியீடு!

சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் கங்குவா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு நடிகர் சூர்யா, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார் சூர்யா. இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தினை 2D நிறுவனமும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அடுத்தது நடிகை ஸ்ரேயா இந்த படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் மாஸ், கிளாஸ்z எமோஷனல் ஆகியவை காண்பிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த படத்திற்கு ரெட்ரோ – RETRO என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த டீசரின் இறுதியில் இந்த படம் 2025 கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் டீசர் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

MUST READ