Homeசெய்திகள்சினிமாகுதிரை மேல் கம்பீரமாக சூர்யா.... தீப்பொறி பறக்கும் கங்குவா ஃபர்ஸ்ட் லுக்!

குதிரை மேல் கம்பீரமாக சூர்யா…. தீப்பொறி பறக்கும் கங்குவா ஃபர்ஸ்ட் லுக்!

-

கங்குவா திரைப்படமானது சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து யோகி பாபு, கோவை சரளா, திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தின் வில்லன்களாக நட்டி நடராஜன் மற்றும் பாபிடியோல் நடிப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது.

ஒரு வரலாற்று சரித்திர திரைப்படமாக உருவாகி வரும் கங்குவா படம் 3D அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி வருகிறது.
இதன் படப்பிடிப்புகள் கொடைக்கானல் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் அடர்ந்த காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. அதாவது 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்த அப்டேட்டுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்காக சூர்யாவின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் நடிகர் சூர்யா மிரட்டலான லுக்கில் மிரள வைத்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் அருண் ராஜா காமராஜின் வாய்ஸ் வரும் இந்த முன்னோட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அந்த வகையில் இந்த முன்னோட்டம் வெளியான 12 மணி நேரத்திற்குள் 5 மில்லியன் பார்வைகளை தொட்டுள்ளது.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாளான இன்று ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விதமாக கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடியாக வெளியான இந்த போஸ்டரில் சூர்யா கையில் வாழுடன் குதிரையில் கம்பீரமாக போருக்கு செல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அனைத்து ரசிகர்களிடமும் கவனம் பெற்றுள்ளது. மேலும் கங்குவா முன்னோட்டத்திலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் குதிரை ஒன்று காட்டப்படுகிறது. அதனால் இந்த படத்தில் குதிரையின் கதாபாத்திரம் மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இப்படம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், தமிழ், கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ